கஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்!
By DIN | Published On : 15th May 2019 08:44 AM | Last Updated : 15th May 2019 08:44 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகி வீடுகளை இழந்த 3 குடும்பங்களுக்கு தன்னார்வலர்கள் இணைந்து வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.
பஞ்சநதிக்குளம், வாய்மேடு பகுதிகளில் கஜா புயலின்போது பாதிப்புக்குள்ளானவர்களை பெங்களூருவில் வசித்துவரும் சௌந்தர்யா பத்திரி நாரயண், சென்னையைச் சேர்ந்த வசந்தி கார்த்தி ஆகியோரது குடும்பத்தினர் சந்தித்து நிவாரண உதவி அளித்தனர். மேலும், துளசியாப்பட்டினம் கிராமத்தில் மாற்றுத் திறனுடைய இளைஞருடன் ஏழ்மை நிலையில் வசித்து வரும் கபிலன் (62) குடும்பத்தினருக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்தனர்.
அதன்படி, பொது சேவையில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் உதவியுடன் ரூ.1 லட்சம் மதிப்பில் வீடு கட்டி, அதை பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தனர். இது தவிர, பஞ்சநதிக்குளம் மேற்கு, தென்னடார் ஊராட்சிகளில் வடுகம்மாள் (50) உள்ளிட்ட 2 குடும்பத்தினருக்கு வீட்டுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தன்னார்வலர்களின் இந்த உன்னத சேவையை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.