குளம் தூர்வாரும் பணி
By DIN | Published On : 15th May 2019 08:45 AM | Last Updated : 15th May 2019 08:45 AM | அ+அ அ- |

செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் தொண்டு நிறுவனம் சார்பில், குளம் தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி மேலத் தெரு கிராமத்தில் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த குளம், "கரம் கொடுப்போம்' என்கிற தொண்டு நிறுவனத் தலைவர் பூபாலன் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த வடுகநாதன், தேவா, அய்யாபிள்ளை, பரிதி, ராஜேஷ் மற்றும் கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது.