இயற்கை உரங்கள் தயாரிப்புப் பயிற்சி
By DIN | Published On : 19th May 2019 09:00 AM | Last Updated : 19th May 2019 09:00 AM | அ+அ அ- |

திருப்பூண்டி அருகேயுள்ள வெண்மணிச்சேரி கிராமத்தில் நபார்டு வங்கி மூலம் இயற்கையான முறையில் உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் விவசாயத்தை தாக்கும் நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த பூச்சி விரட்டிகளான பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மீன்அமிலம், ஊட்டச்சத்து உரங்கள், தொழுவுரம் , புளித்த மோர் கரைசல் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலக மேலாளர் பிரபாகரன், நாகை ஐஓபி முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், சமூகநல கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறங்காவல் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பூச்சி விரட்டிகள் தயாரிப்பது குறித்தும் அதை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கினர். மேலும் இயற்கை உரங்களை பயன்டுத்துவதன் மூலம் குறைந்த நீரில் விவசாயம் செய்யலாம், சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம், வருவாயை அதிகப்படுத்தலாம், நோய்கள் மற்றும் பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.