கீழ்வேளூர் வட்டம், தேவூர் தேவதுர்கை அம்மன் சக்தி பீடத்தில் பெளர்ணமி யாக பூஜைகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.
இதையொட்டி, தேவதுர்கை அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சக்தி பீட நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.