முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: இந்து மக்கள் கட்சி சார்பில் தர்ப்பணம்
By DIN | Published On : 19th May 2019 09:01 AM | Last Updated : 19th May 2019 09:01 AM | அ+அ அ- |

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, சீர்காழி உப்பனாற்றாங்கரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது. அதன்படி, நிகழாண்டு, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, சீர்காழி உப்பனாற்றங்கரையில் தர்ப்பணம் (திதி) கொடுக்கும் சடங்குகள் செய்யப்பட்டன.
கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் சடங்குகளை செய்து வைத்தார். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி மற்றும் சொக்கலிங்கம், நாராயணசாமி, ஜெயப்பிரகாஷ், மோகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.