மின்பாதைகள் சீரமைப்புப் பணி
By DIN | Published On : 19th May 2019 09:00 AM | Last Updated : 19th May 2019 09:00 AM | அ+அ அ- |

மின் பாதை சீரமைப்புப் பணிகள் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றன.
மின்வாரிய, மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு சனிக்கிழமை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், நாகை நகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் பாதைகள் மற்றும் மின்சார வயர்களில் உரசி, பாதிப்பை ஏற்படுத்திய சாலையோர மரங்களில் உள்ள கிளைகளை மின் ஊழியர்கள் வெட்டி அகற்றி மின்பாதைகளை சீரமைத்தனர்.
தமிழ்நாடு மின்வாரியம், நாகை செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்அருண் ஆகியோரது மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
திருக்குவளையில்...
திருக்குவளை, மே 18: திருக்குளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திருக்குவளை துணை மின்நிலையம் மற்றும் அதனைச் சேர்ந்த மின்பாதைகளான தேவூர், மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி அளவில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நாகை மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) பி. லதாமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் எஸ். பாலாஜி தலைமையிலும், திருக்குவளை மின்பொறியாளர் கே. ராஜ்குமார் மேற்பார்வையிலும் நடைபெற்றது. இப்பணி நிறைவுபெற்றதும் மாலை 5 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.