நாகை மக்களவைத் தொகுதிஇந்திய கம்யூ. வேட்பாளர் எம். செல்வராசு வெற்றி

நாகை மக்களவைத் தொகுதி (தனி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனினும்,


நாகை மக்களவைத் தொகுதி (தனி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனினும், வியாழக்கிழமை நள்ளிரவு வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கீழ்வேளூர், நாகை, வேதாரண்யம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 13,03,060 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், 9,95,947 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 76.43 ஆகும்.
இத்தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம். செல்வராசு, அதிமுக சார்பில் எம். சரவணன், அமமுக சார்பில் டி. செங்கொடி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கே. குருவையா, நாம் தமிழர் கட்சி சார்பில் பி. மாலதி உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக இடையே போட்டி நிலவியது.
தொடர்ந்து முன்னிலை...
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் 21-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை (இரவு 10 மணி நிலவரப்படி) முடிவில், எம். செல்வராசு 5,00,186 வாக்குகள் பெற்றிருந்தார். 23 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு ஒரு மணி அளவில் முடிவடைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியிருந்த நிலையிலும், வாக்குப் பெட்டி மாற்றம் குறித்த சர்ச்சை காரணமாக, வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதில் தாமதம் நீடித்தது.  
இரவு 10 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் எம். சரவணன் 2,98,250 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டி. செங்கொடி 67,639 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி. மாலதி 49,504 வாக்குகளும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கே. குருவையா 13,952 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டாவுக்கு 9,082 வாக்குகள் கிடைத்திருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com