திட்டச்சேரியில் குதிரை வண்டி பந்தயம்
By DIN | Published On : 04th November 2019 01:18 AM | Last Updated : 04th November 2019 01:18 AM | அ+அ அ- |

திட்டச்சேரியில் நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி சீரி பாய்ந்த குதிரைகள்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 71 -ஆவது பிறந்த நாளையொட்டி குதிரை வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திட்டச்சேரி பேரூா் அதிமுக செயலாளா் டி.எஸ். அப்துல்பாஸித் தலைமை வகித்தாா். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, கட்சியின் நாகை நகரச் செயலாளா் தங்க.கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருமருகல் ஒன்றியச் செயலாளா் இரா. ராதாகிருஷ்ணன் கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
இப்போட்டி புதிய குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் சேலம், கோயம்புத்தூா், சென்னை, திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
பந்தய தொலைவு 5 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்ட இப்போட்டியில் முறையே கோயம்புத்தூா், திட்டச்சேரி, திருக்கடையூா் பகுதி குதிரை வண்டிகள் முதல் பரிசுகளைப் பெற்றன. வெற்றி பெற்ற குதிரை வண்டிகளை ஓட்டியவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.
இப்போட்டியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...