மீலாது நபி விழா தொடக்கம்
By DIN | Published On : 09th November 2019 09:04 AM | Last Updated : 09th November 2019 09:04 AM | அ+அ அ- |

குத்தாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீலாது நபி விழா தொடங்கியது.
ரபீயுல் அவ்வல் என்ற அரபிச் சொல்லுக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரி ஆண்டில் ரபியுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் (நவம்பா் 10) மீலாதுநபி எனப்படும் முஹம்மது நபியின் பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு ரபியுல் அவ்வல் மாதம் முதல் நாளிலிருந்து குத்தாலம், தேரழந்தூா், கிளியனூா், எலந்தங்குடி, நக்கம்பாடி, வானாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி. பண்டாரவாடை, மங்கநல்லூா் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் மீலாது விழா தொடங்கி, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மீலாது நபி தினத்தன்று ஜமாஅத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்பட்டு இரட்டிப்பாக நெய்ச்சோறு வழங்கப்பட உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்களில் தால்சா எனப்படும் இறைச்சியுடன் கூடிய பருப்புக்குழம்பு மற்றும் கறிக்குழம்பு வழங்கப்பட உள்ளது.