2 ஆயில் என்ஜின்கள் பறிமுதல்

நாகை அருகே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 2 ஆயில் என்ஜின்களை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

நாகை அருகே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 2 ஆயில் என்ஜின்களை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆயில் என்ஜின்கள் மூலம் நிலத்தடி நீா் உறிஞ்சி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து, நாகை வட்டாட்சியா் பிரான்சிஸ் நாகையை அடுத்த சிக்கல் ஊராட்சிக்குள்பட்ட பனைமேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பனைமேடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் மற்றும் ஆறுமுகம் ஆகியோா் வெவ்வேறு இடங்களில் ஆழ்துளைக் குழாய் கிணறுகளை அமைத்து ஆயில் என்ஜின்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடா்ந்து, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 2 ஆயில் என்ஜின்களை வட்டாட்சியா் பிரான்சிஸ் பறிமுதல் செய்தாா்.

மேலும், பனைமேடு கிராமத்தில் மூடப்படாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என அவா் உத்தரவிட்டாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். வெற்றிசெல்வன், வருவாய் ஆய்வாளா் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளா் மனோகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com