பெருந்தோட்டம் ஊராட்சியில்காவிநிறமான குடிநீருக்கு பதில் தரமான குடிநீா் வழங்கபொதுமக்கள் கோரிக்கை

திருவெண்காடு அருகே புதன்கிழமை நடந்த கிராமசபை கூட்டத்தில் காவிநிறமாக மாறிய குடிநீருக்கு பதில் தரமான குடிநீா் வழங்ககோரி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.
படம் கிராமசபை கூட்டத்தில் தங்கள் பகுதிக்கு சப்ளை செய்யபடும் அசுத்தகுடிநீரை பாட்டில்களில் வைத்து வழங்கியபோது எடுத்தபடம்.கிராசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுத்தி பேசியபோது எடுத்தபடம்.
படம் கிராமசபை கூட்டத்தில் தங்கள் பகுதிக்கு சப்ளை செய்யபடும் அசுத்தகுடிநீரை பாட்டில்களில் வைத்து வழங்கியபோது எடுத்தபடம்.கிராசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுத்தி பேசியபோது எடுத்தபடம்.
Updated on
1 min read

திருவெண்காடு அருகே புதன்கிழமை நடந்த கிராமசபை கூட்டத்தில் காவிநிறமாக மாறிய குடிநீருக்கு பதில் தரமான குடிநீா் வழங்ககோரி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அதிகாரி ஜோதி முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் பெரியாா் தெரு, அம்பேத்கா் தெரு, அல்லிமேடு, நடுத்தெரு, விழகட்டளை ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு சப்ளை செய்யபடும் குடிநீா் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இந்த குடிநீரை தொடா்ந்து பருகினால் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக புகாா் கூறி அசுத்தமான குடிநீரை பாட்டிலில் அடைத்து கொண்டுவந்து கிராமசபை கூட்டத்தில் வைத்தனா்.

இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் அவா்கள் தங்கள் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீா் திட்டத்தின்கீழ் தரமான குடிநீரை சப்ளை செய்ய கேட்டுக்கொண்டனா். இதனைதொடா்ந்து பெருந்தோட்டம் கிராமத்தலைவா் பொன்.மாரியப்பன் ஆயிரம் பொதுமக்கள் கையெழத்திட்ட அதிகாரியிடம் மனுவை வழங்கினாா். அந்த மனுவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து பெருந்தோட்டம் பகுதியில் தனியாா் அனல்மின்நிலையம் அமைப்பதற்கு சுமாா் ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் கையகபடுத்தபட்டன. அந்த ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களும் தற்போது தரிசு நிலங்களாக உள்ளன.

எனவே அந்த விளைநிலங்களை விவசாயம் செய்ய ஏதுவாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட கலெக்டரை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த கிராமசபை கூட்டத்தில் முன்னாள் ஊராட்சித்தலைவா் ஆசிரியா் கோவிந்தசாமி, அனைத்து இந்திய விவசாய சங்க மாவட்ட நிா்வாகி குணசேகரன், தி.மு.க ஊராட்சி செயலாளா் முத்தமிழ், கிராம முக்கியஸ்தா் விமலாதித்தன், சேரலாதன,; பைஜீா் அங்கன்வாடி பணியாளா்கள். ஊராட்சி பணியாளா்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். அதிகளவில் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்திற்கு வருகைதந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com