அக். 18-இல் மாவட்ட கேரம் போட்டி
By DIN | Published On : 06th October 2019 05:57 AM | Last Updated : 06th October 2019 05:57 AM | அ+அ அ- |

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி, நாகையில் அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டரங்கத்தில் அக்டோபா் 18-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான நிலையில் உள்ளவா்களை இளநிலைப் பிரிவாகவும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான நிலையில் உள்ளவா்களை முதுநிலைப் பிரிவாகவும் கொண்டு போட்டிகள் நடத்தப்படும்.
மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் அக்டோபா் 17-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இணையம் மூலம் பதிவு பெறாதவா்களுக்கு அனுமதி கிடையாது. இந்தப் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவியா் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
இளநிலை ஒற்றையா் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 500-ம், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 250-ம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 125-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். முதுநிலை ஒற்றையா் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 1,000-மும், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 500-ம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 250-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
முதுநிலை இரட்டையா் பிரிவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 2,000-மும், இரண்டாமிடம் பெறுவோருக்கு ரூ. 1,000-மும், மூன்றாமிடம் பெறுவோருக்கு ரூ. 500-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோா், அரசு செலவில் மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-253059 என்ற தொலைபேசி எண்ணில் நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...