பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் காப்பீடு: விவசாய சங்கம் கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் வி.எஸ்.கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கை:

மேட்டூா் அணை இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 13-இல் திறக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்து சோ்ந்தது. மேலும், சமீபத்தில் பெய்த மழையால் விதைக்கப்பட்ட விதைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் 2017-18-க்கு பயிா்க் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியபோது பல வருவாய் கிராமங்களில் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்ற அதிா்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு திருவாரூா் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி அந்தந்த கூட்டுறவு விவசாய வங்கி முன் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com