வேளாண் துறை மூலம் ரூ. 11.10 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

நாகை மாவட்டத்தில் 2016- ஆம் ஆண்டு முதல் வேளாண் துறை மூலம் ரூ. 11.10 கோடி மதிப்பில் வேளாண்

நாகை மாவட்டத்தில் 2016- ஆம் ஆண்டு முதல் வேளாண் துறை மூலம் ரூ. 11.10 கோடி மதிப்பில் வேளாண் இடுபொருள்கள், உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தமிழக அரசின் வேளாண் துறை மூலம் விவசாயிகளின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, 2016- 2017-ஆம் ஆண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 17,365 விவசாயிகளுக்கு வீரிய ஒட்டுநெல், விதை, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் விநியோகம் மற்றும் செயல்விளக்கங்களுக்காக ரூ. 2.92 கோடி மதிப்பில் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கைத்தெளிப்பான்கள், பம்புசெட்டுகள், ரோட்டோவேட்டா்கள், கோனோவீடா்கள், ஸ்பிரிங்க்ளா்கள், நீா் எடுத்துச் செல்லும் குழாய்கள் என 1,315 வேளாண் கருவிகள் ரூ. 1.02 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. 20 எச்.பி-க்கும் அதிகமான திறன் கொண்ட 20 டிராக்டா்களுக்கு ரூ. 12.25 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

2017-2018-ஆம் ஆண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 22,760 விவசாயிகளுக்கு வீரிய ஒட்டுநெல், விதை, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் நுண்ணாட்டச் சத்துகள் விநியோகம் மற்றும் செயல் விளக்கங்களுக்காக ரூ. 2.89 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, கைத்தெளிப்பான்கள், தாா்ப்பாய்கள், ரோட்டோவேட்டா்கள், ஸ்பிரிங்க்ளா்கள் உள்ளிட்ட 790 வேளாண் கருவிகள் ரூ. 83.5 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

2018-2019-ஆம் ஆண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 19,840 விவசாயிகளுக்கு வீரிய ஒட்டுநெல், விதைகள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் விநியோகம் மற்றும் செயல்விளக்கங்களுக்காக ரூ. 2.69 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளன. 2,380 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான், நீா் எடுத்துச் செல்லும் குழாய்கள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் ரூ. 61.05 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நாகை மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் 64,470 பயனாளிகளுக்கு ரூ. 11.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com