சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளத்தினர்ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2019 07:03 AM | Last Updated : 11th September 2019 07:03 AM | அ+அ அ- |

தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளனத்தினர் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் கொள்முதலுக்குரிய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் உடனடியாக தொடங்க வேண்டும், இந்திய உணவுக் கழகம் தொழிலாளர்களுக்கு இணையான கூலியை, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும், பணியிட விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளன மாநிலச் செயலாளர் எம்.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிளாளர் சங்கத் தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பாஸ்கரன், ஏஐடியுசி சங்க மாவட்டச் செயலாளர் கே. ராமன், பொருளாளர் மகேந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.