ஆற்றில் குளித்த இளைஞர் மாயம்
By DIN | Published On : 22nd September 2019 04:06 AM | Last Updated : 22nd September 2019 04:06 AM | அ+அ அ- |

தில்லையாடி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த இளைஞர் சனிக்கிழமை மாலை ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி மாயமானார்.
கடலூர் மாவட்டம், மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற சுரேஷ்குமார் (24). தில்லையாடி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த இவர், அங்குள்ள மகிமலை ஆற்றில் குளிக்கும்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மாயமானார். அவரை, பொறையாறு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடினர். மேலும், பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட போலீஸாரும் சுரேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.