மக்கள் குறைகேட்பு முகாம்
By DIN | Published On : 22nd September 2019 04:07 AM | Last Updated : 22nd September 2019 04:07 AM | அ+அ அ- |

பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடக்கம், முத்தூர், கொடவிளாகம், பெரம்பூர், சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர். பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தனி வட்டாட்சியர் திருமாறன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், அதிமுக ஒன்றியச் செயலாளர் தமிழரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...