சீர்காழியில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி சமுஇ மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு, தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர்
ரஞ்சித்குமார் பேரணியைத் தொடங்கிவைத்தார்.
பேரணியில், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தவாறு பிரதான வீதிகளில் முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர்.
இதில், திட்ட அலுவலர் முரளிதரன், செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.