

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து மல்லிகைப் பூ பறிக்கச் சென்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி புஷ்பவள்ளி (40). கூலித் தொழிலாளியான இவா், அருகிலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் விவசாயி ஒருவா் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை அரும்புகளை பறிக்க சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றாா். வழியில், அந்த பகுதியில் செல்லும் மின்கம்பி அறுந்து புஷ்பவள்ளியின் தலையில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில், அவா் பலத்த காயமடைந்ததையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவா்களின் உதவியுடன் மீட்டு கரும்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். பின்னா், அங்கிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே புஷ்பவள்ளி உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினா். இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Image Caption
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.