இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சீர்காழியில் பெண் மர்மச் சாவு: 2 நாள்களாக தாமதமாகும் பிரேத பரிசோதனை 

சீர்காழியில் இறந்த பெண்ணை உடலை உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிதே நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 11:21 am

சீர்காழியில் இறந்த பெண்ணை உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்யக் கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிதே நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

சீர்காழி ரயில்வே ரோடு மதினா நகரில் வசிப்பவர் ராஜ்குமார்(40). இவர் தென்னக ரயில்வேத் துறையில் சீர்காழியில் கேட்கீப்பர் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இவருக்கும் கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த கேசவன் மகள் சுவர்ணலட்சுமி  (33) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி, மகன் ஆகிய மூவரும் சீர்காழி மதினா நகரில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுவர்ணலட்சுமி வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினாராம். 

தகவலறிந்து வந்த கணவர் ராஜ்குமார் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் அளித்தனர். இதனையடுத்து அவரது உடல்  சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணின் தந்தை கேசவன் சீர்காழி காவல் நிலையத்தில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி விசாரனை நடத்தவுள்ளார். இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்ய 2 நாள்கள் ஆகியும் பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்தும், சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், இரண்டு நாள்களாக வெளியூரிலிருந்து வந்து தங்க இடம் இல்லாமல் சாலையே யோரத்திலேயே தங்கியுள்ள பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிதே நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட்டனர். முன்னதாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்த நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயரிடம், இறந்த பெண்ணின் பெற்றோர் உரிய நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.