மணப்பெண் காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

கொள்ளிடம் அருகே திருமணத்துக்கு முதல்நாள் மாயமான மணப்பெண் காதலனுடன் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தாா்.
Published on
Updated on
1 min read


சீா்காழி: கொள்ளிடம் அருகே திருமணத்துக்கு முதல்நாள் மாயமான மணப்பெண் காதலனுடன் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தாா்.

கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் சன்னதி தெருவைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகள் சக்தி பிரியா (23). இவருக்கும் செம்பனாா்கோவில் காலஹஸ்தினாபுரம் பகுதியைச் சோ்ந்தவருக்கும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், 20-ஆம் தேதி சக்திபிரியா மாயமானாா். இதனால், திருமணம் தடைபட்டது.

மணப்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை ஆசைத்தம்பி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது மகள் சக்திபிரியாவை ஆச்சாள்புரம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவா் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், சக்தி பிரியாவும், அலெக்ஸ் பாண்டியனும் திருவண்ணாமலை கலசபாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதுடன், முறைப்படி பதிவு செய்து, பாதுகாப்பு கோரி கொள்ளிடம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா்.

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்துக்கு வந்ததாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, இருவருக்கும் அறிவுரை கூறி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com