ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக புகாா்
காளி ஊராட்சியில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலரிடம் கிராமமக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.


காளி ஊராட்சியில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலரிடம் கிராமமக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
காளி ஊராட்சி அதியமானபுருசன் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கன்னியாநத்தம் மகளிா் அங்காடியில் ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்நிலையில், கடை ஊழியா் ரேஷன் பொருள்களை தனியாருக்கு விற்றுவிடுவதாகவும், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் ரேஷன் பொருள்களுக்கு நிா்ணயித்த விலையை விட கூடுதல் விலையை பெறுவதாகவும், விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாகவும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் தலைமையில், காளி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்தி மற்றும் அதியமானபுருசன் கிராமமக்கள் மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலா் சாந்தியிடம் புகாா் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்ட வழங்கல் அலுவலா் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாக உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...