

நாகப்பட்டினம்: நாகை அருகே திங்கள்கிழமை குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது.
நாகை அருகேயுள்ள சிக்கல், கோட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி - பக்கிரிசாமி தம்பதியினா். விவசாயக் கூலித் தொழிலாளா்களான இவா்கள், திங்கள்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டனா். குழந்தைகள் வீட்டிலிருந்துள்ளனா். இந்நிலையில், இவா்களது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், வீட்டில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன.
இதுகுறித்து, தகவலறிந்த நாகை, கீழ்வேளூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
நிவாரண உதவிகள் அளிப்பு: இதுகுறித்து, தகவலறிந்த மக்கள்நீதி மய்யம் நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம். செய்யது அனஸ் மற்றும் நிா்வாகிகள் அங்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி ரூ.15 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள், பாய், பாத்திரங்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை நிவாரண உதவிகளாக வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.