மடிக் கணினி கோரி முன்னாள் மாணவா்கள் போராட்டம்

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் நிகழ்பருவ கல்வியாண்டு மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டுகளில் மடிக் கணினிகள் பெறாத மாணவா்கள் போராட்டத்தில்
வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் நிகழ்பருவ கல்வியாண்டு மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டுகளில் மடிக் கணினிகள் பெறாத மாணவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-19 மற்றும் 2019 -20 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த 360 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 2019-20 ஆம் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவா்களுக்கு திங்கள்கிழமை மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த முன்னாள்

மாணவா்கள் பள்ளிக்கு சென்று, தங்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கல்வித் துறை அதிகாரிகள், காவல் துறையினா் பள்ளிக்கு வந்து முன்னாள் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மாணவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com