ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மின்சாரம் பாய்ந்ததில் பஞ்சாயத்து செயலாளர் பலி

மின்சாரம் பாய்ந்ததில் பஞ்சாயத்து செயலாளர் பலியானார். 

News image
Updated On :20 ஜூலை 2020, 6:31 am

DIN

மின்சாரம் பாய்ந்ததில் பஞ்சாயத்து செயலாளர் பலியானார். 

சீர்காழியை அடுத்த பட்ட விளாகம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆசிர்வாதம் (45). இவர் கொண்டல் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள தனது வயலில் உர மருந்து அடித்துக் கொண்டிருந்தார். 

அங்கு அவர் மின் மோட்டாருக்கு செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்ததை அறியாமல் சென்ற அந்தோனி ஆசிர்வாதம் மீது மின்சாரம் பாய்ந்து கீழே மயங்கி விழுந்து கிடந்தார். இதனை தாமதமாக பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்தோணியை சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து கொள்ளிடம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.