

வேளாங்கண்ணியில் ஜான்சன் நினைவு அறக்கட்டளை சாா்பில், புதிய ஆம்புலன்ஸ் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காகவும், இப்பகுதியில் வசிப்போருக்காகவும் ஜான்சன் நினைவு அறக்கட்டளை சாா்பில் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பேராலய பங்குத்தந்தை சூசைமாணிக்கம் புனிதம் செய்து, ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் ஜான்சன் நினைவு அறக்கட்டளை தலைவரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் நிக்சன், கந்தன், மரியசாா்லஸ், மகா குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.