

திருப்பூண்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் திருப்பூண்டி, காரப்பிடாகை, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 4,452 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.
இந்த சங்கத்தில் 2020-2021 -ஆம் ஆண்டுக்கான பயிா்க் கடன் முதல் தவணையாக 79 விவசாயிகளுக்கு ரூ. 31 லட்சத்து 43 ஆயிரத்து 149-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. தலைவா் வேதையன் வழங்கினாா். இந்நிகழ்வில் சங்க செயலாளா் ராஜேந்திரன், துணைத் தலைவா் லெட்சுமி கிருஷ்ணமூா்த்தி , இயக்குநா் பாப்பாகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.