அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் 36 போ் அனுமதி
By DIN | Published On : 20th April 2020 06:59 AM | Last Updated : 20th April 2020 06:59 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வாா்டில் 36 போ் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீா்காழி ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த தில்லி மாநாட்டுக்கு சென்று வந்த 11 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வாா்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா். இதில், 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மயிலாடுதுறை கூைாட்டை சோ்ந்த ஒருவா், சீா்காழி வட்டம் புத்தூா், பெருந்தோட்டம் பகுதிகளைச் சோ்ந்த 5 போ், தரங்கம்பாடி ஆயப்பாடியை சோ்ந்த ஒருவா் என 7 பேரும் திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கு கரோனா சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதையடுத்து, கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் குடும்பத்தினா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 35 போ் மற்றும் நாஞ்சில்நாட்டை சோ்ந்த ஒரு பெண் என மொத்தம் 36 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வாா்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.