நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிக மூடல்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அலுவகலம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அலுவகலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமணையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா ஆய்வு, கரோனா பாதித்தவர்கள் அனுமதிக்க சிறப்பு வார்டு அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டர். அப்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பாதிப்பு உள்ளதால் அலுவலகம் தற்காலிகமாக மூடபடுகிறது.

நாகை மாவட்டத்தில் கரோனாவால் 900 பேர் பாதிக்கப்பட்டு 500 பேர் வீடு திரும்பிய நிலையில் 400 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் மேலும் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். 

பின்னர் அலுவலக ஊழியர்களுக்கு தொற்று இல்லாமல் இருந்தால் மட்டுமே திங்கட்கிழமை முதல் அலுவலகம் செயல்படும், தொற்று இருந்தால் தொடர்ந்து மூடப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com