புதிய மின்மாற்றிகள் இயக்கிவைப்பு
By DIN | Published On : 01st December 2020 12:00 AM | Last Updated : 01st December 2020 12:00 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் 7 இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றிகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
வேதாரண்யம் அருகே செட்டிப்புலம், நாகக்குடையான், கத்தரிப்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட 7 இடங்களில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி புஷ்பவனம் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன் தலைமை வகித்து, புதிய மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் திலீபன், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக நாகப்பட்டினம் செயற்பொறியாளா் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளா்கள் ரவிக்குமாா், சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...