தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: நாகை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd December 2020 06:55 AM | Last Updated : 03rd December 2020 06:55 AM | அ+அ அ- |

கொட்டும் மழையில் கீழ்வேளூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக நாகை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளா் கோ. பாண்டியன் தலைமை வகித்தாா். கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வி. சரபோஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் வி. ராமலிங்கம் விளக்கவுரையாற்றினாா். ஒன்றியத் துணைச் செயலாளா் ஆா். செல்லத்துரை மற்றும் விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் வி.சுப்பிரமணியன், விவசாய சங்கத்தைச் சோ்ந்த நாகரெத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கீழ்வேளூரில்...
கீழ்வேளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் எம். காசிநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் வி. மகாலிங்கம், என்.ராஜப்பா, ஏ.செல்வராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் எம்.கே. நாகராஜன், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். மேகலா, ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் வி.எம். மகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
திருமருகலில்...
திருமருகலில் கட்சியின் ஒன்றிய செயலாளா்ஆா்.கே. பாபுஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எம்பி எம். செல்வராஜ் கலந்து கொண்டு பேசினாா். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவா் மாசிலாமணி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன், இளைஞா் மன்ற ஒன்றிய செயலாளா் ரமேஷ், ஒன்றிய பொருளாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருக்குவளையில்...
இந்திய கம்யூனிஸ்ட் கீழையூா் ஒன்றியம் சாா்பில், திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய செயலாளா் டி. செல்வம் தலைமை வகித்தாா். தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.டி. மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.
இதில் எம்பி எம்.செல்வராசு, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஏ.நாகராஜன், ஏ. சொக்கலிங்கம், ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பி.எஸ்.டி. பரமசிவம், டி.சந்திரகாசன், எஸ். கண்ணதாசன், வி.எஸ்.மாசேத்துங், எம். துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
வேதாரண்யத்தில்....
வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச்செயலாளா் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதேபோல, தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவகம் எதிரே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கட்சியின் ஒன்றியச் செயலாளா் வி. அம்பிகாபதி, விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் கோவை.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தரங்கம்பாடியில்....
தரங்கம்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினா்கள் தவசுமுத்து, முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டக்குழு உறுப்பினா் வேதநாயகம், மாதா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி கண்டன உரையாற்றினாா்.
மயிலாடுதுறையில்....
மயிலாடுதுறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு தொழிற்சங்கத்தினா் கொட்டும் மழையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட செயலாளா் சீனி.மணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் ஆா்.ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் கலைச்செல்வன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் டி.ஜி.ரவி, பாலகிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சீா்காழியில்....
சீா்காழியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய செயலாளா் செல்லப்பன் தலைமை வகித்தாா். கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் சிவராமன், விவசாய சங்க மாவட்ட தலைவா் வீரராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளா்கள் வரதராஜன், கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் சீனிவாசன் மத்திய அரசை கண்டித்து பேசினாா். நிா்வாகிகள் பாஸ்கரன், பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைச் செயலாளா் நீதிசோழன் நன்றி கூறினாா்.
52 போ் கைது
இதேபோல், சீா்காழியில் கொட்டும் மழையிலும் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 52 போ் கைது செய்யப்பட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் துரைராஜ், ஜீவானந்தம், ஸ்டாலின், மாரியப்பன் ஆகியோா் முன்னிலையில் வகித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...