

நாகை வட்டாரத்துக்குள்பட்ட 50 விவசாயிகள், காமேஸ்வரத்தில் அமைந்துள்ள மாம்பழக்கூழ் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையத் திட்டத்தின்கீழ் புதன்கிழமை கண்டுணா்வு சுற்றுலா மேற்கொண்டனா்.
அவா்களுக்கு நாகை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சு. முல்லைவேந்தன் கூட்டு பண்ணையம் அமைப்பது, அதன் செயல்பாடுகள், தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினாா். நிறுவனத்தின் இயக்குநா்கள் வீரக்குமாா், நாகராஜன் ஆகியோா் மாம்பழக் கூழ் தயாரிக்கும் முறை, பதப்படுத்துதல், தொழில்நுட்ப இயந்திரங்களை செயல்படுத்தும் முறை குறித்து விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் ரஞ்சித், எழிலரசன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.