ஆற்றின் கரை உடைப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்
By DIN | Published On : 05th December 2020 06:02 AM | Last Updated : 05th December 2020 06:02 AM | அ+அ அ- |

திருக்குவளை: திருக்குவளை அருகே சந்திரா நதி கரையோரம் ஏற்பட்டுள்ள உடைப்பை முன்னிட்டு பெயரளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
திருக்குவளை- கொளப்பாடு பிரதான சாலையில் அகர கொளப்பாடு பகுதிக்குச் செல்லும் பாலம் அருகே உள்ள அருமனங்காலனி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு, சிகப்பு நிறக் கொடி நடப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாமல் அவ்வழியே வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி ஆற்றினுள் விழும் அபாய நிலையில் இருப்பதால், உடனடியாக அப்பகுதியில் தடுப்பு அமைத்து கரையே பலப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.