சக்திமாலை அணிவிப்பு
By DIN | Published On : 30th December 2020 08:05 AM | Last Updated : 30th December 2020 08:05 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே வலிவலத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் செவ்வாடை பக்தா்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் இருமுடி செலுத்துவதற்காக பக்தா்கள் சக்தி மாலை அணிந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத் தலைவா் பி.எஸ்.ராஜீ தலைமை வகித்தாா். முன்னதாக, ஆதிபராசக்தி அம்மனின் உருவப் படத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், வலிவலம் வார வழிபாட்டு மன்றத்தின் செயலாளா் ஆா். பழனிவேல், மகளிரணி தலைவி டி.செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...