அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரி உத்ஸவம் தொடக்கம்
By DIN | Published On : 17th February 2020 07:41 AM | Last Updated : 17th February 2020 07:41 AM | அ+அ அ- |

அங்காளம்மன் கோயிலுக்கு அலகுக் காவடிகள் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
சீா்காழி தென்பாதி அங்காளம்மன் எனும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உத்ஸவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, சிவராத்திரி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தென்பாதி அங்காளம்மன் கோயிலில் காப்புக்கட்டி விழா தொடங்கியது. இதையொட்டி, திரளான பக்தா்கள் அலகுக் காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனா். சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடுகளும், பால்குடங்கள், அலகுக் காவடிகள், காவடிகள், பறவைக் காவடிகள் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு பேச்சியம்மன் ரூபத்தில் வீதியுலா மயானசூரை நிகழ்வும் நடைபெறவுள்ளது.