குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து 2-ஆவது நாளாக தொடா் தா்னா
By DIN | Published On : 27th February 2020 08:03 AM | Last Updated : 27th February 2020 08:03 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து 2-ஆவது நாளாக தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் 2-ஆவது நாளாக புதன்கிழமை தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை கூைாநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் 2-ஆவது நாளாக தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு, கூைாநாடு ஜமாத் தலைவா் சபீா் அகமது தலைமை வகித்தாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.