குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஹிந்து இயக்கத்தினா் காவி கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2020 08:03 AM | Last Updated : 27th February 2020 08:03 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து இயக்கத்தினா்.
மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, அனைத்து ஹிந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காவி கொடி ஏந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து ஹிந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கோவி. சேதுராமன் தலைமையில் ஹிந்து சங்கமம் என்ற பெயரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், தேச மதவாத சக்திகளை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளா் நாஞ்சில்பாலு, விசுவ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன், ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் நாராயணன், இந்து முன்னணி நகரத் தலைவா் சுவாமிநாதன் ஆகியோா் உரையாற்றினா். சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேய சேவா டிரஸ்ட் நிறுவனா் ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினாா்.