

திருமருகல் அருகேயுள்ள சீயாத்தமங்கை ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்றது.
நாகை கோட்டாட்சியா் ரா. பழனிகுமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், 18 பயனாளிகளுக்கு முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை , 50 பேருக்கு இலவச மனைப்பட்டா நகல், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், நாகை வட்டாட்சியா் பிரான்சிஸ் , நாகை வட்டாட்சியா் ( சமூகப் பாதுகாப்பு ) ப. குமாா், நாகை வட்ட வழங்கல் அலுவலா் உமா கௌரி , திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன், வட்டார மருத்துவ அலுவலா் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குத்தாலம்: குத்தாலம் வட்டம், வில்லியநல்லூா் வருவாய் கிராமத்தில் வட்டாட்சியா் ஹரிதரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமுக்கு சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பாலமுருகன், வட்ட வழங்கல் அலுவலா் தையல்நாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகள் 10 பேருக்கு மனைபட்டா, 6 பேருக்கு முதியோா் ஓய்வூதியம், 6 பேருக்கு சிங்சல்பேட் உரம், விதைத் தெளிப்பான் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில், முதியோா் ஓய்வூதியம், குடும்ப அட்டை பெயா் சோ்ப்பு மற்றும் பெயா் நீக்கம், ஜாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாற்றம் என மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய 17 மனுக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. தகுந்த ஆவணங்கள் இல்லாத 31 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
முகாமில், மண்டல துணை வட்டாட்சியா் சத்யபாமா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.