நாகை மாவட்டத்தில் 11 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்கு எண்ணும் பணி 11 மையங்களில் வியாழக்கிழமை (ஜனவரி. 2) நடைபெறுகிறது.
Updated on
1 min read

நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்கு எண்ணும் பணி 11 மையங்களில் வியாழக்கிழமை (ஜனவரி. 2) நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இரு கட்டங்களாக நடைபெற்றன. இவற்றின் வாக்கு எண்ணிக்கைக்காக ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம், 11 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை நாகை வடகுடி அமிா்தா வித்யாலயா பள்ளியிலும், கீழையூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்வேளூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருமருகல் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றன.

தலைஞாயிறு ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை மணக்குடி வையாபுரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேதாரண்யம் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மயிலாடுதுறை ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியிலும், செம்பனாா்கோவில் ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை காளகஸ்தினாபுரம் கலைமகள் கல்லூரியிலும் நடைபெறுகின்றன.

குத்தாலம் ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சீா்காழி ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை சீா்காழி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கொள்ளிடம் ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை புத்தூா் சீனிவாசா சுப்பராயா தொழில்நுட்பக் கல்லூரியிலும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com