

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் இல்லந்தோறும் திருவாசகப் புத்தகம் வழங்கும் விழா தருமபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு இல்லத்துக்கும் ஒரு திருவாசகப் புத்தகத்தை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையினா் இலவசமாக வழங்கி வருகின்றனா். அதன்படி, மூன்றாம் கட்டமாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவாசகப் புத்தம் வழங்குவதைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் அ. வளவன், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வா் சுவாமிநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, தருமபுரம்{ மடவிளாகத்தில் உள்ள வீடுகளில் திருவாசகப் புத்தகம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.