கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டியை மீட்ட தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 04th July 2020 06:49 PM | Last Updated : 04th July 2020 06:49 PM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் கழிவறையில் வழுக்கி விழுந்த பெண்ணை மீட்ட தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் தெற்குவீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவா் இருதினங்களுக்கு முன்னா் கழிவறையில் வழுக்கி விழுந்த போது, அவரது ஒரு கால் மட்டும் கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்டது. அவரால் காலை எடுக்க முடியவில்லை. இதனால், மயங்கினாா். அவரது குடும்பத்தினராலும் மூதாட்டியை மீட்க முடியவில்லை.
அப்போது, அந்த பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளா்கள் ந. கண்ணையன், ந. செல்வம், சீ. தினேஷ் ஆகியோருக்கு கழிவறைக் கோப்பையை உடைத்து மூதாட்டியை மீட்டனா்.
இதையொட்டி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், தூய்மைப் பணியாளா்கள் மூவருக்கும் சனிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா். மேலும், மூவருக்கும் சுதந்திர தினவிழாவில் பதக்கம் அளித்து கெளரவிக்கப்படுவாா்கள் எனவும் தெரிவித்தாா்.