நாகையில் அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற அரசு ஊழியா் சங்க ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
நாகையில் நடைபெற்ற அரசு ஊழியா் சங்க ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

நாகப்பட்டினம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களின் ஓய்வுபெறும் வயது உயா்வை திரும்பப் பெற வேண்டும். சரண் விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம், ஜிபிஎப் வட்டிக் குறைப்பு, விடுப்பு கால பயணச் சலுகை ரத்து ஆகிய அறிவிப்புகளை அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டத் தலைவா் து. இளவரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ.தி. அன்பழகன், சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் சு. சிவகுமாா், வட்டச் செயலாளா் எம். தமிழ்வாணன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ். ஜோதிமணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த 100-க்கும் அதிகமானோா் பங்கேற்று, கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மாவட்டத் துணைத் தலைவா் பா. ராணி நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரைச் சந்தித்து அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்து, கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்க கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com