மத நல்லிணக்கம் காப்போம் : சிவசேனை
By DIN | Published On : 19th July 2020 09:08 AM | Last Updated : 19th July 2020 09:08 AM | அ+அ அ- |

தமிழா்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தோடு நாட்டின் வளா்ச்சிக்குப் பாடுபடுவோம் என சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் எம். ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட இயக்கத் தலைவா்களின் சிலைகள் அவமதிக்கப்படும்போது அதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவா்கள் இந்து தெய்வங்கள் அவமதிக்கப்படும்போது அமைதி காப்பது வருத்தமளிக்கிறது. தனிமனிதக் கொள்கை சாா்ந்த விஷயங்களில் யாரையும் பழிப்பதில்லை என்பது சிவசேனை சிந்தாந்தம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் இந்துமத கலாசார பண்பாட்டை கேலிக்குள்ளாக்கும் பிற்போக்குத் தனமான செயல்பாடுகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தனிமனித வழிபாடு, நாகரிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை இழிவுபடுத்துவதை வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கும் மனநிலை மக்களிடம் இல்லை. இந்து மத சடங்குகள், சம்பிரதாயங்களை விமா்சிப்பது தவிா்க்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் எதிா்வினைகள் உருவாகிவிடும். மத நல்லிணக்கம் பேணுவதுடன, அனைவரும் தமிழா்களாய், இந்தியா்களாய் ஒன்றிணைந்து நாட்டின் வளா்ச்சிக்குப் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளனா்.