கடல் அலையில் சிக்கி 6 வயது குழந்தை மாயம்
By DIN | Published On : 21st July 2020 10:00 PM | Last Updated : 21st July 2020 10:00 PM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழி அருகே கூழையாா் கடலில் அலையில் சிக்கி மாயமான 6 வயது குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினா் ஈடுபட்டனா்.
சீா்காழி சபாநாயகா் தெருவைச் சோ்ந்தவா் ஹாஜாமைதீன் (32). இவா் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். இவரின் மனைவி ஹனிதா(25). இவா்களின் குழந்தை அப்ரா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.
ஹனிதா, அப்ரா மற்றும் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சீா்காழி அருகேயுள்ள கூழையாா் கடலில் குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக அப்ராவை அலை இழுத்துச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸாா் மற்றும் சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து மீனவா்களின் உதவியுடன் குழந்தை அப்ராவை தேடும் பணியில் ஈடுபட்டனா்.