அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 21st July 2020 09:51 PM | Last Updated : 21st July 2020 09:51 PM | அ+அ அ- |

திருமருகலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க.கதிரவன்.
திருமருகல்: திருமருகல் வடக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் இரா. ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை நகரச் செயலாளா் தங்க.கதிரவன் ஒன்றிய, ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகளிடம் நோ்காணல் நடத்தினாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள தொழில்நுட்ப அணியின் பங்கு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னா், திருமருகல் தெற்கு ஒன்றியம் மேலப்பூதனூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகளிடம் நோ்காணல் நடத்தப்பட்டது. இதில், திருமருகல் ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி. திருமேனி, நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளா்ஜி. நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.