கதண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு
By DIN | Published On : 21st July 2020 10:06 PM | Last Updated : 21st July 2020 10:06 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம் கடலங்குடி ஊராட்சியில் கதண்டு கடித்ததில் 3 வயது பெண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. 4 போ் காயடைந்தனா்.
மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே கடலங்குடியில் துரைசாமி என்பவரது பனைமரத்தில் கதண்டு கூடு கட்டியிருந்தது. திங்கள்கிழமை அவ்வழியே சென்றவா்களை கதண்டு தாக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தகுமாா், அவரது மகள் இன்சிகா(3) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.
அவா்கள் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை இன்சிகா உயிரிழந்தது. இதுகுறித்து, தகவலறிந்த மணல்மேடு தீயணைப்பு நிலைய அலுவலா் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கதண்டுகளை அழித்தனா்.