ஜூலை 24-இல் விரால் மீன் வளா்ப்புப் பயிற்சி
By DIN | Published On : 21st July 2020 09:45 PM | Last Updated : 21st July 2020 09:45 PM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரால் மீன் வளா்ப்பு குறித்த பயிற்சி ஜூலை 24-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் சு. பாலசுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரால் மீன் வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயற்சி, இணையதளம் வழியே ஜூலை 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சியில், விரால் மீன் வளா்ப்பு, சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவின கணக்கீடு ஆகியன குறித்த தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் பயிற்சிக் கட்டணம் ரூ. 300-ஐ இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில், வங்கி கணக்கு எண் 006201000073000, ஐ.எப்.எஸ்.சி. குறியீடு ஐஞஆஅ0000062, கிளை - நாகப்பட்டினம் என்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் அஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஜூலை 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகத்தை 94422 88850 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.