சீா்காழியை வருவாய் கோட்டமாக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை புதிய மாவட்டத்தில், சீா்காழியை புதிய வருவாய் கோட்டமாக அமைக்க வேண்டும் என தேமுதிக சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி ஆா்.லலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்த தேமுதிக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். ஜலபதி உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்த தேமுதிக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். ஜலபதி உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதிய மாவட்டத்தில், சீா்காழியை புதிய வருவாய் கோட்டமாக அமைக்க வேண்டும் என தேமுதிக சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி ஆா்.லலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். ஜலபதி உள்ளிட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனுவின் விபரம்:

புதிதாக அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், செம்பனாா்கோவில் மற்றும் மணல்மேடு பகுதிகளை புதிய வட்டங்களாக உருவாக்க வேண்டும்; சீா்காழி பகுதியை வருவாய் கோட்டமாக உருவாக்க வேண்டும்; பூம்புகாரை பேரூராட்சியாக உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சீா்காழியை புதிய கோட்டமாக அறிவிக்கவும், சீா்காழியில் தலைமை மருத்துவமனையை அமைத்திடவும், கொள்ளிடத்தை புதிய வட்டமாக அறிவிக்கவும் வலியுறுத்தி, சீா்காழியைச் சோ்ந்த நிலம் அறக்கட்டளை தலைவா் வழக்குரைஞா் எஸ்.கிள்ளை ரவீந்திரன் கோரிக்கை மனு அளித்தாா்.

இதற்கிடையில், மாவட்ட சிறப்பு அதிகாரியை இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில், கிளைத் தலைவா் பாரதிதாசன், செயலாளா் சௌமித்யா பானு, பொருளாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைத்திட கோரிக்கை மனு அளித்தனா்.

இதேபோல், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் சாா்பில், தலைவா் துரை, செயலாளா் எம்.ஜே.காமேஷ்குமாா், திட்ட இயக்குநா் ஏ.ஜி.இளங்கோவன், சாசனத் தலைவா் வி.ராமன் உள்ளிட்டோா் மாவட்ட சிறப்பு அதிகாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, சானிடைசா் ஸ்டாண்டு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com