நாகையில் 4 கூரை வீடுகள் தீக்கிரை

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட முத்தரசபுரத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது சகோதர்களான சரவணன் மற்றும் விவசாயி அய்யாப்பிள்ளை மூவரும்
நாகையில் 4 கூரை வீடுகள் தீக்கிரை

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட முத்தரசபுரத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது சகோதர்களான சரவணன் மற்றும் விவசாயி அய்யாப்பிள்ளை மூவரும் மற்றும் பணியாளர்கள் பலர் ஒன்றிணைந்து கொளப்பாடு ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபாளையம் சோழவித்தயாறு அருகாமையிலுள்ள மூங்கில் கொல்லை மற்றும் கருவேல மரங்களை கொழுந்தும் பணியில் இன்று  காலை ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது காற்று வேகமாக வீசி வரும் நிலையில் தீப்பொறி பறந்து ஜெயபிரகாஷ் என்பவரின் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில் மளமளவென தீ அருகாமையில் இருந்த நாகரத்தினம், பாஸ்கர், கற்பகம் ஆகிய மூவரின் வீடுகளுக்கும் பரவி நான்கு வீடுகள் தீக்கிரையாயின.

மேலும் மொத்தமாக நான்கு வீடுகளிலும் சேர்த்து வீட்டு உபயோகப் பொருள்கள், பணம், நகை, என  வீட்டிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.அதனைத் தொடர்ந்து தலைஞாயிறு தீயணைப்பு நிலைய துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.மேலும் ஆற்று கரையோரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பிடித்தவுடன் தீயணைக்கும் முற்படாமல் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு தப்பி  ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் தேவையற்ற மரங்களை தீயிட்டுக் கொளுத்தும் போது முன்னேற்பாடாக அருகில் நீர் ஏதும் வைத்துக்கொள்ளாமல் அலட்சியமாக பணி செய்ததே இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என இப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். 

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்குவளை வட்டாட்சியர் சாந்தி,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுதர்சன் ஆகிய அரசு சார்பில் நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5,000 ரொக்கம் வழங்கினர். உடன் வருவாய் ஆய்வாளர் புனிதா, கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தலைஞாயிறு ஒன்றிய தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, கொளப்பாடு ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலாஜி, அதிமுக பிரதிநிதி காளிதாசன் தன்னார்வ இளைஞர் மெக்கானிக் கார்த்திக் மற்றும் பலர் உடனிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com