சீர்காழியில் மின்சார வாரியத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் மின்சார வாரியத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீர்காழியில் மின்சார வாரியத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் மின்சார வாரியத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் குறுவை சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின் பாதைகள் பழுதடைந்தும், மின் மாற்றிகள் சீரமைக்காத நிலையில் குறைந்த அழுத்த மின்சாரம் தான் கிடைப்பதாகவும், இதனால் மின் மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையும் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்ய முடியாத நிலைமைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.  

எனவே தமிழக அரசு உடனடியாக மின் பாதைகளை சீரமைத்து மின்மாற்றிகள் பழுது நீக்கம் செய்து விவசாயத்திற்கு குறைந்தபட்சம் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு அறிவித்த 2020 ஆண்டிற்கான மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com